பாவாடை தாவணியில் சில்லுனு இருக்கும் தமிழ் தொலைக்காட்சி நாயகி- அனன்யா ஸ்பெஷல்.


தமிழ் தொலைக்காட்சி உலகில் கலர்ஸ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் "வந்தாள் ஸ்ரீதேவி". இந்த தொலைக்காட்சி தொடரில் லக்ஷ்மி மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இரு கதாபாத்திரங்களில் கதையின் நாயகியாக நடித்து வருபவர் இளம் நடிகை அனன்யா மணி.


23 வயதாகும் நடிகை அனன்யா நீலகுரி மாவட்டம் மசினகுடியில் பிறந்து வளர்ந்த தமிழ் தொலைக்காட்சி நாயகி மற்றும் மாடல். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை அனன்யா நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வெளியான "பைரவா" படத்திலும் கீர்த்தி சுரேஷின் தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.


சின்னத்திரையில் முன்னனி நாயகியாக நடித்து வந்தாலும் நடிகை அனன்யாவிற்கு சினிமா உலகில் முன்னனி நாயகியாக வலம் வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதற்காக நடிகை அனன்யா அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்களிலும் பங்கேற்று அசத்தி வருகிறார்.


சமீபத்தில் நடிகை அனன்யா அசத்தலான பாவாடை தாவணியில் செம்ம ஹாட் போட்டோஷூட்டில் பங்கேற்று அசத்தியுள்ளார். நடிகை அனன்யாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு தற்போது வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.


சமீபத்தில் நடிகர் சாருஹாசன் நடிப்பில் வெளியான "தாதா87" படத்தில் நடித்திருந்த நடிகை அனன்யாவிற்கு இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் புதிய பட வாய்ப்புகளை கொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






 


Tags: ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.