ஹிந்தி திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி நாயகியாக வலம் வருபவர் நடிகை கரீனா கபூர். நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த நடிகை கரீனா கபூர் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் திரை நடிகர் சயூப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு தைமூர் அலி கான் என்ற மகன் உள்ளது குறிப்பிடதக்கது.
தற்போது 40 வயதாகும் நடிகை கரீனா மீண்டும் கருத்தரித்தார். கடந்த சில மாதங்களாக தான் கற்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக தன் வயிறு தெரிவது போன்ற புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வந்த கரீனாவுக்கு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்ஹ்டுவமனையில் மீண்டும் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று தன் கனவர் மற்றும் குழந்தையுடன் வீடு திரும்பிய நடிகை கரீனா தன் வீட்டின் வாசலில் தன் கனவர் மற்றும் கைக்குழந்தையுடன் புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்துள்ளர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.


0 comments: